இலங்கை பிரதான செய்திகள்

கல்வி வளா்ச்சி அறக்கட்டளையின் வருடாந்த மாணவா் கௌரவிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த.உயர்தர பரீட்சையில்  பெறுபேறுகளில் முதல் பத்து நிலைகளை பெற்ற மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று 10-02-2017  கிளிநொச்சியில் இடம்பெற்றது.

2016 இல் க.பொ.த உயா்தர பரீட்சையில் விஞ்ஞானம்,கணிதம்,வர்த்தகம்,கலை, உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகியவற்றில் தோற்றி  மாவட்டத்தில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவா்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனா்.

அத்தோடு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையானது  பல்கலைகழக கல்வியை தொடர்வதற்கு போதிய பொருளாதார வசதியை கொண்டிராத மாணவா்களுக்கு  அவர்களது கல்வியை தொடர்வதற்கு கடன்களை வழங்கி வருவதோடு குறித்த கடன் பணத்தை  குறிப்பிட்ட மாணவா்கள் கல்வியை பூர்த்தி செய்து தொழில் வாய்ப்பை பெற்ற பின்னா் மீண்டும் செலுத்த வேண்டும் என்றும்  அவ்வாறு மீள செலுத்துகின்ற பணம் பிறிதொரு மாணவனுக்கு வழங்கப்படுகிறது எனவும் என்றும் நிர்வாகத்தினா் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி வளா்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபருமான பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி வளா்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல், கிளிநொச்சி பிராந்திய பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் என்.சுதாகரன், மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள், மருத்துவா்கள்  மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *