இலங்கை பிரதான செய்திகள்

காணி மற்றும் காணாமல் போனவா்களின் விடயங்களில் அரசுக்கு தோல்வியே – ஜேவிபி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடக்கில் பூதாகாரமான பிரச்சினையாகவும் மக்களின் உணா்வுபூரமான விடயமாகவும் காணப்படுகின்றது  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினை. இந்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின்  பிரச்சினைக்கு உரிய தீர்வைபெற்றுக்கொடுப்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. அதற்காக உருப்படியான வேலைத்திட்டத்தை இதுநாள் வரைக்கும் அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. என ஜேவிபியின் ரில்வின் சில்வா  தெரிவித்துள்ளாா்

இன்று 11-02-2017 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட அவா் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளாா் அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

யுத்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் விடயத்திலும் அரசின் நடவடிக்கைள் தோல்வி அடைந்துள்ளது. யுத்தத்தை காரணம் காட்டி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த விடயத்தில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்ததாக காணமுடியவில்லை. இதனால் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் உக்கிரமடைந்த பிரச்சினையாக காணப்படுகிறது

கடற்றொழில் விவசாயிகளின் பிரச்சினைகள் பெரிய பிரச்சினையாக காணப்படுகிறது. குறிப்பாக எமது கடற்பரப்பில் இந்திய மீனவா்களின் ஆக்கிரமிப்பு காரணமாக எமது கடல் வளங்களை சூறையாடுவதோடு, எமது கடற்றொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.

இந்தப் பிரச்சினைககு இதுவரை நாளைக்கும் அரசு அங்கேயும் இங்கேயும் காய்களை நகர்த்தியிருக்கிறதே தவிர  அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை. கடற்றொழிலாளா்களின் பிரச்சினையில் முன்னைய அரசு போன்றே தற்போதைய அரசும் நடந்துகொள்வதனை காணக் கூடியதாக உள்ளது.

அது மாத்திரமல்ல இந்தியாவுக்கு அடிபணிந்த இந்தியாவின் வார்த்தை ஜாலங்களுக்கு  செவிமடுகின்ற அரசாகவும் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்த அரசாகவும் இந்த அரசாங்கம் காணப்படுகிறது.

வட பகுதியில் மக்கள் இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் தென்பகுதியில்  மக்களுக்குச் சொந்தமான வளங்களை வெளிநாட்டுக்கு தாரை வார்க்கின்றன நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அம்பாந்தோட்டையில் இருக்கின்ற 15 ஆயிரம் ஏக்கா் காணி வெள்நாட்டுக்கு தாரை வாா்க்கின்றது. அதுமாத்திரமன்றி அம்பாந்தோட்டை துறைமுகம் வெளிநாட்டுக்கு தாரைவார்க்கின்றது இவ்வாறு மக்களுக்குச் சொந்தமான காணிகளை வளங்களை நீண்ட கால குத்ததைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசு தாரைவார்க்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. எனவும் குறிப்பிட்ட அவா்

இவ்வாறு நாடு முழுவதும் மக்கள் பொதுப் பிரச்சினையை எதிர்கொள்கின்ற போது மக்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்துவதனை விடுத்து  வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரு பொதுவான போராட்டத்தைமேற்கொள்ள வேண்டும் அதற்காக மக்கள் விடுதலை முன்னணி மக்கள அணி திரட்டி வருகிறது எனவும் தெரிவித்தாா்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *