இலங்கை பிரதான செய்திகள்

‘சமஷ்டி என்ற போர்வையில் நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அரசுக்கு பாடம் புகட்டுவோம்’ – ருக்மலே தம்மகீர்த்தி தேரர் :-

நாட்டை பிரிக்கும் முயற்சியில் நாட்டிலுள்ள தலைவர்களே ஈடுபட்டுள்ளதாகவும் சமஷ்டி என்ற போர்வையில் நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் சகல மஹாநாயக்கர்களும் ஒன்றிணைந்து அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் ருக்மலே தம்மகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.

வாகன மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நேற்றைய தினம் சில பௌத்த தேரர்கள் சென்று பார்வையிட்டனர். குறித்த சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ருக்மலே தேரர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

நாட்டை பிரிக்கும் முயற்சி ரகசியமாக இம்பெற்று வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த தேரர், தமது உயிர் பிரிந்த பின்னரே அவ்வாறு செய்ய முடியுமென மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகின்றதென்றும், இந்நிலை தொடர்ந்தால் நாடு எதிர்காலத்தில் மிகவும் பயங்கரமான நிலையை எதிர்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *