இலங்கை பிரதான செய்திகள்

இயற்கை வளங்களை அழிக்கும் கடத்தல்காரர்களால் நாட்டின் சுற்றாடல் அழிந்து வருகின்றது- ஜனாதிபதி


மொரகஹகந்த திட்டத்தின் பெறுபேறாக வடமேல் மாகாண பாரிய வாய்க்கால் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று குருணாகல் குள சுற்றுவட்ட சுற்றாடல் வலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘பசுமைக் கனவு 2017’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் இயற்கை வளங்களை அழிக்கும் கடத்தல்காரர்கள் மற்றும் அறியாமை காரணமாக இயற்கை வளங்களின் பெறுமதியை கருத்திலெடுக்காமல் செயற்படுபவர்கள் நாட்டின் சுற்றாடலை அழித்து வருவதாகவும்  ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருமளவில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்தல், கல்லுடைத்தல், மண்அகழ்வு ஆகிய பாரதூரமான சுற்றாடல் அழிவு, பசுமையை கனவை அடைவதற்கு சவாலாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மண்அகழ்வு காரணமாக அந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய அழிவினை நினைவுபடுத்திய ஜனாதிபதி; அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொறியியலாளர் மற்றும் பொறுப்பான அலுவலர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *