இலங்கை பிரதான செய்திகள்

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலபோக பயிர்ச் செய்கையில் செய்கைச் செய்யப்பட்ட உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படுகின்ற  உருளைக் கிழங்கின்  தொகையை  நுகர்வுத் தேவையின் அளவுக்கேற்ப, எமது உற்பத்தியின் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, எஞ்சிய தேவையான அளவு தொகையினை மாத்திரம் இக் காலகட்டத்தில் இறக்குமதி செய்வதற்கும், அதனது இறக்குமதி வரியை போதியளவு அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ;, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் , இந்த அரசு தேசிய உணவு உற்பத்தி திட்டத்தின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் 22.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு தலா 200 கிலோ வீதமாக மானிய விலை விதை வழங்கி,  இம்முறை சுமார் 89 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருளைக் கிழங்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அந்த வகையில், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, தென்மராட்சி, வடமராட்சி போன்ற பல பகுதிகளில் செய்கை செய்யப்பட்டுள்ள உருளைக் கிழங்கு இம்மாதம் முதல் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிவரை அறுவடை செய்யப்படவுள்ளதால், இந்தக் காலகட்டத்தில், குறிப்பாக எமது விவசாய மக்களது உற்பத்திகளுக்கு ஏற்ற நியாய விலை கிடைப்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் இறக்குமதிகளை எமது உற்பத்திகளை இனங்கண்டு கட்டுப்படுத்துவதற்கும், இறக்குமதி வரியை போதுமான வரை அதிகரிப்பதற்கும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *