இலங்கை

புகையிரதப் பெட்டியில் படம் வரைந்த பிரான்ஸ் தம்பதிகள் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


புகையிரதப் பெட்டியில் படம் வரைந்த பிரான்ஸ்  தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிரதப் பெட்டியில் படம் வரைந்து புகையிரத திணைக்களத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக  குறித்த  தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினர் காலி பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட  போது அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Gousset Gaeten மற்றும் Leal De Sousa ஆகியோரே இவ்வாறு புகையிரதப் பெட்டிகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர். புகையிரத  திணைக்களத்திற்கு 64, 440 ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக காவல் நிலையத்தில் இருவர் மீதும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *