இலங்கை பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருகின்றது – பந்துல குணவர்தன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அபிவிருத்தித் தொடர்பான புகைப்படங்களை காண்பித்து இவ்வாறு ஜனாதிபதியை ஏமாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் உற்பத்திசாலையை அமைத்து 300,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலியான பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *