பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்து ரக்பி வீரர் 35 வயதில் மரணம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரர் சியோனி லோகி ( Sione Lauaki)தனது 35ம் வயதில் மரணித்துள்ளார். 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் நியூசிலாந்து தேசிய அணியை சியோனி லோகி  பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.

இவர் இருதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சியோனி  இ  சீப்ஸ் என்ற உள்நாட்டு கழகத்திற்காக போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இவரது   மறைவிற்காக சக வீரர்களும், ரக்பி நிர்வாகத்தரப்பும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *