இலங்கை பிரதான செய்திகள்

துமிந்த சில்வாவின் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவில் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடத் தவறியதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பிலான விசாரணைகள் இன்றைய தினம் நடத்தப்பட்ட போது, துமிந்த சில்வாவின் உடல் நிலை தொடர்பிலான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆடிகல இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, வைத்திய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *