இலங்கை பிரதான செய்திகள்

வீசா இன்றி அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியும் என்ற தகவலை உறுதி செய்ய முடியாது – வெளிவிவகார அமைச்சு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வீசா இன்றி அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியும் என்ற தகவலை உறுதி செய்ய முடியாது என வெளிவிவகார அமைச்சு  அறிவித்துள்ளது. இலங்கையர்கள் அமெரிக்காவிற்குள் வீசா இன்றி பிரவேசிக்க முடியும் எனவும்  அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டராம்பின் அரசாங்கம் இவ்வாறு இலங்கைக்கு சலுகை வழங்கியுள்ளதாகவும்  அமெரிக்க இணைய தளமொன்றில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த தகவல்களை உறுதி செய்ய முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்த அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை எனவும், இந்த விடயம் குறித்து ஆராய்ந்து தகவல்களை வெளியிடுவதாகவும் வெளிவிவகார அமைச்சின் மேலதிக பணிப்பாளர்நாயகம் சத்யா ரொட்ரிகோ  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *