இலங்கை பிரதான செய்திகள்

வீசா நடைமுறைகளில் மாற்றமில்லை – அமெரிக்கா

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடைமுறைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கான வீசா நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் வீசா இன்றி அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தனது நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *