இலங்கை பிரதான செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றில் சிறைத்தண்டனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றம் தலா ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளதாக டுபாய் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தங்கம், பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் ஆகியனவற்றை கொள்ளையிட்டதாகவும் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி அந்த நாட்டு காவல்துறையால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சாரதியாக கடமையாற்றி ஒருவரும், வேலை தேடிக் கொண்டிருந்த ஐந்து பேரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

சிறைத் தண்டனை காலம் நிறைவடைந்தப் பின்னர் குறித்த ஆறு பேரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *