உலகம் பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலை குண்டுதாரி நீதிபதிகள் பயணம் செய்த வாகனம் ஒன்றின் மீது மோதி தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதில் இதில் நீதிபதிகள் சிலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பழங்குடிகள் வசிக்கும் வடமேற்கு பிரதேசமான மொஹ்மாண்டில் அரச கட்டடம் ஒன்றை இலக்கு வைத்து இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் இன்று நடத்தியத் தாக்குதலில் ஐந்து பேர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *