இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு கல்குடாவில் கைக்குண்டு மீட்பு:


மட்டக்களப்பு கல்குடா பிரதேச வீதியில், கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள காளிகோவில் வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் இன்று காலை குறித்த கைக்குண்டை கண்டுள்ள நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கல்குடா காவல்துறையினர் கைக்குண்டை மீட்டுள்ளதோடு, அதனை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *