இலங்கை பிரதான செய்திகள்

இந்திய பிரதமர் இலங்கைக்கு வர உள்ளார்


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வர உள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் பண்டிகை நிகழ்வில் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து இலங்கை நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தகவல்  வெளியிட்டுள்ளார்.  சர்வதேச வெசாக் பண்டிகை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மியான்மார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *