இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு-

கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.

கடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஆண்கள் அணி, கூடைப்பந்தாட்டத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆண்கள் அணி ஆகியன இதன்போது கௌரவிக்கப்பட்டன. ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற செந்தூரன், ஆண்களுக்கான தட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரகாஸ்ராஜ் மற்றும் தேசியமட்ட கலாசாரப் போட்டியில் வெற்றிபெற்றோரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

கௌரவிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், சுகிர்தன், பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *