இந்தியா பிரதான செய்திகள்

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது:-

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைதியம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவதாகக் கூறிய நீதிபதிகள், இன்று செவ்வாய்க்கிழமையே அவசர வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

எனினும் இன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் குறித்த வழக்கு இடம் பெறவில்லை என்பதனால் மனு மீது நாளை புதன்கிழமை விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *