பிரதான செய்திகள் விளையாட்டு

நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை


இலங்கை கிரிக்கெட்அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் ஒழுக்க மீறல் இடம்பெற்றதாக  தெரிவித்தே  இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போட்டியின் போது  நிரோஷன் நடுவரின் தீர்ப்பை விமர்சித்தாகவும் ஐ.சி.சி. விதிமுறைப்படி இவரது செயல்பாடு நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படியாக அமைந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தடையால்  நிரோஷன் நாளை நடைபெற இருக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டியிலும்  அதற்கு அடுத்தாக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *