இந்தியா பிரதான செய்திகள்

ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள  குளிரூட்டல்  வைப்பகம் ஒன்றில்  இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத், ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள  தனியாருக்கு சொந்தமான  இந்த குளிரூட்டல்  வைப்பகத்தில்  பீஹார் மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில்  இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வைக்கோல்கள் அதிகமாக இருந்ததால் தீ  விரைவாக பரவியதாகவும்  இதனால்  அங்கு  தூங்கிக் கொண்டிருந்தவர்களில் 6 பேர் வெளியே உடனடியாக  வெளியேற முடியாத நிலையில் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *