இந்தியா பிரதான செய்திகள்

ஈஷா யோகா மையத்திற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.முத்தம்மாள் என்பவரால் தொடரப்பட்ட இந்த வழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை அனுமதிக்கக் கூடாது எனவும்  பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  யானைகளின் வழித் தடத்தை மறித்து, கட்டிடங்களைக் கட்டியுள்ளனர் எனவும் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைப்பதற்காக ஏராளமான மரங்களை வெட்டியுள்ளனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈஷா யோகா மையம்கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது . மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.  மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதி என்பதனால்  இப்பகுதியில் கட்டிட கட்டுமானம் மேற்கொள்ள அதிக விதிமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தற்போது உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டு எதிர்வரும்; 24ம்திகதி இந்த சிலையை இந்தியபிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.

இந்த சிலை அமைத்ததில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகவும் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.. ன்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *