இலங்கை பிரதான செய்திகள்

உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம்


கொழும்பு துறைமுகமானது உலகிலுள்ள சிறந்த 25 துறைமுகங்களிற்கு தரமுயர்ந்துள்ளது.  2017ம் ஆண்டு சர்வதேச எல்பாலைனர் (Alphaliner)  தரப்படுத்தலிற்கமைவாகவே துறைமுகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

இத்தரப்படுத்தலிற்கமைவாக 2016ம் ஆண்டு உலகிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் 23ம் இடத்தை பிடித்திருந்தது. 2015ம் ஆண்டு கொழும்பு துறைமுகமானது 26ம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது.  கொழும்பு துறைமுகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சிறந்த சூழலை உருவாக்கியமையே இவ்வெற்றியின் இரகசியமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையிற்கு மேலதிகமாக தனியார் துறையினரும் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இதற்கு முன்னர் இவ் ஒவ்வொரு நிறுவனங்களும் தனித் தனியாவே செயற்பட்டன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாம் கொழும்பு துறைமுகத்திற்கு பொது வியாபார திட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் கொழும்பு துறைமுக வளாகத்தினுள் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.  அதன் அடிப்படையில் தங்களுடைய கௌரவத்தினை பாதுகாத்தவண்ணம் ஒட்டுமொத்த கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தியின் பொருட்டு அனைத்து தரப்பினரையும் எம்மால் ஒன்றினைக்க முடிந்துள்ளது. இதற்கு மேலதிகமாக கொழும்பு துறைமுகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்’.

இத்திட்டத்தின் கட்டாய பிரதிபலனாக மற்றும் ஏனைய காரணிகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் கொழும்பு துறைமுகத்தை உலகிலுள்ள 20 சிறந்த துறைமுகங்களிற்குள் தரமுயர்த்த இயலுமென நான் நம்புகின்றேனெனவும்   அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களை இன்று (23) சந்தித்தப்பொழுது அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *