இலங்கை பிரதான செய்திகள்

படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது – விமல்

படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட படை அதிகாரிகள் இந்த சமப்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினரை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு படையினரை கைது செய்து வருவதாகவும் செல்லிடப்பேசி தொடர்பாடல் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அடையாள அணிவகுப்பு நடத்தப்பட முன்னதாகவே படையினரின் புகைப்படங்கள் கீத் நொயாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *