இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு ஜந்தாவது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  20-02-2017 திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாகவும்  போராட்டம்  தொடர்கிறது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்க்க கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உ றவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது

தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *