இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவின் மேகாலய மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் மேகாலய மாநிலத்தில் லொறி ஒன்று வீதியின்  தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

மேகாலய மாநிலம்  கஹாசி ஹில்  என்ற  மாவட்டத்தில் உள்ள கிராம  மக்கள், தேவாலயம் ஒன்றிற்கு செல்வதற்காக இன்று காலை லொறியில் பயணித்துள்ள நிலையில்  லொறியானது சாரதியின்  கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்துள்ளவர்களுள் 9 பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *