உலகம் பிரதான செய்திகள்

ஈரான் போர்ப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது


ஈரான் போர்ப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் கடலில் போர்ப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமுத்திரத்திலும் ஓமான் வளைகுடாவிலும் ஈரான் கடற்போர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் கடற் கொள்கைகளுக்கு எதிரான வருடாந்தப் போர்ப் பயிற்சி நடத்தப்படுவதாக ஈரானிய உயர் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரால்  Habibollah Sayyari தெரிவித்துள்ளார்.

கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொண்டு இந்த பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *