உலகம் பிரதான செய்திகள்

ஈராக் குண்டுவெடிப்பில் செய்தியாளர் உயிரிழந்துள்ளார்.


ஈராக் குண்டுவெடிப்பில் செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலின் கிழக்குப் பகுதியை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து ராணுவம் மீட்டு விட்ட நிலையில்  தற்போது அந்த நகரின் மேற்குப்பகுதியையும் மீட்பதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

இது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சென்றிருந்த ஷிபா கார்டி  பெண் செய்தியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  கடந்த சனிக்கிழமை வீதியேரம் காணப்பட்ட  வெடிகுண்டு ஒன்று வெடித்ததிலேயே இவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *