உலகம் பல்சுவை பிரதான செய்திகள்

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா ஆரம்பமாகியது:-

89-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் நடிகர்கள் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சிறந்த படத்துக்கான விருது மூன்லைட் படத்துக்குக் கிடைத்துள்ளது. ஒஸ்கர் 2017 விருதுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த படத்துக்கான விருதினை மூன்லைட் வென்றுள்ளது.

சிறந்த ஒஸ்கர் துணை நடிகர் விருது மஹேசர்லா அலிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார். சிறந்த ஒப்பனைக்கான விருது சூசைடு ஸ்வாடு படம் வென்றது. சிறந்த ஆவணப் படம் விருதை ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருதை சூசைடு ஸ்குவாடு படம் வென்றது.

தி ஜங்கிள் புக் படத்துக்கு ஒஸ்கார் விருது..


89-வது ஒஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஒஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது.

அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஒஸ்கர் விருதினை பெற்றுள்ளார்.

மேலும் சில விருதுகள் விவரம்:-

சிறந்த துணை நடிகர் – மஹேசர்லா அலி

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கொலின் அட்வுட்

சிறந்த ஆவண குறும்படன் – ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா

சிறந்த ஒப்பனை, சிகையலங்கார விருது – சூசைடு ஸ்குவாடு

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் விருது – ஹக்ஸா ரிட்ஜ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – அரைவல்

கௌரவ ஒஸ்கர் விருது – ஜாக்கிசான்

சிறந்த துணை நடிகை – வியோலா டேவிஸ் தை(பென்சஸ் படம்)

சிறந்த வெளிநாட்டு மொழி படம் – தி சேல்ஸ்மேன்(ஈரான்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – லா லா லேண்ட்

ஹாக்ஸா ரிட்ஜ் படம் இதுவரை 2 ஒஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இதேவேளை 89-வது ஸ்கர் விருது வழங்கும் விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதினை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *