இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதியதில்  விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 56 வயதுடைய கந்தையா மாரியாயி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின்  பேரக்குழந்தைகளான  2 வயதான டிலானி மற்றும் 7 வயதான டெனுசன் ஆகிய இரு சிறுவர்களும் காயமடைந்தநிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டிச் சாரதியும், காயமடைந்த சிறுவர்களின் தாயாரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சாரதியின் நித்திரைத் தூக்கத்தினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *