இலங்கை பிரதான செய்திகள்

பிரான்ஸிலிருந்து இலங்கை சென்ற தந்தையும் மகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது


பிரான்ஸில் இருந்து இலங்கை சென்ற  மட்டக்களப்பைச்  சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா மற்றும்  அவரது மகளான  தியாகராசா ஜனனி ஆகியோரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்றுள்ள இவர்கள் தற்போது   நாடு திரும்பிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டமைக்கான காரணம்  எவையும் தெரிவிக்கப்படாத நிலையில் இவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்பபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *