இலங்கை பிரதான செய்திகள்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது:-

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக் கிழமை எட்டாவது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.இந்த மக்கள் 1990 ஆம்ஆண்டு முதல் மேறபடி கிராமத்தில் வாழ்நது வருகின்றனர்.

இந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசம் பன்னங்கண்டி பசுபதிகமம் என அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த சிவாபசுதி என்பவரின் காணியாகும், தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்செயல்கள்காரணமாக இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மக்களில் சிலரை, குறித்த காணிகளில் அப்போதே நிர்வாகத்தினர் குடியேற்றியுள்ளனர்.

அக்காலப்பகுதிகளிலேயே இவர்களுக்கு கிளிநொச்சியில் அரச காணிகளை சொந்தமாக வழங்கியிருக்க முடியும் ஆனால் அது தொடர்பில் எவரும் அக்கறை கொள்ளவில்லை. இந்த தற்போது அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோர் சட்டப்பிரச்சினையை மாத்திரம் பேசி வருகின்றார்கள் தங்களின் மனிதாபிமான விடயத்தை பற்றி கவனிக்கவில்லை. எனக்குறிப்பிடும் பன்னங்கண்டி மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தங்களின் பின்பு வந்து குடியேறியவர்களுக்கு எல்லாம் நிரந்தர காணிகளும்,வீட்டுத்திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது ஆனால் பன்னங்கண்டி மக்களாகிய நாங்கள் இன்றும் அகதி வாழ்க்கை போன்றே வாழ்ந்து வருகின்றோம்.

எங்களின் பிரச்சினை சட்டரீதியான பிரச்சினை என்றால் இதுஏன் அன்று எங்களை இந்த இடத்தில்குடியேற்றுறும் போது அதிகாரிகளுக்கு தெரியவில்லையா இந்தச் சட்டப்பிரச்சினை,எனவே எங்களின் விடயத்தில் எல்லோரும் அக்கறையின்றியே இருந்து விட்டனர். எனவேதான் நாங்கள் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில்லாவது அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *