இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை 16-03-2017 வடக்கு கிழக்கு ஓருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிகதிளை கொண்டு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பத்து மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அருகில் ஒன்று கூடிய பொது மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தோடு கிளிநொச்சி 155 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள ஜநா அலுவலகத்திற்குச் சென்று அங்கு தங்களின் கோரிக்கைகள்  அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளியத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல், பயங்கரவாதச் தடைச் சட்டத்தை உடனே நீக்கு,இலங்கையில் நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு ஒன்றை உருவாக்கு போன்ற வாசகங்கள்  அடங்கிய பதாதைகளையும், பனர்களையும் ஏந்தியிருந்தனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *