இந்தியா பல்சுவை

நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளது


நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த  கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  அந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் முன்னிலையாகுமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து  தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் முன்னியானார்.

அங்கு  2 அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறையில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி இடம்பெற்று தனுஷின்  அங்க அடையாளங்கள் தொடர்பான  அறிக்கை மதுரை மருத்துவமனையின்  உயரதிகாரியால்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே  நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான விசாரணையை நீதிமன்றம்  மார்ச்-27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது..

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *