இலங்கை பிரதான செய்திகள்

பிரித்தானியாவுக்கும் விமானங்களில் இலத்திரனியல் சாதனங்களை கையில் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்படுமா?

இலத்திரனியல் சாதனங்களை கைப் பொதிகளாக விமானங்களில் கொண்டு செல்ல, அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறான தடையை கொண்டு வர, பிரித்தானியாவும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கைச் சேர்ந்த ஆறு நாடுகளின் பயணிகள் விமானத்தில் இவ்வாறான சாதனங்களை கையில் எடுத்துச் செல்ல தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதிகளில் இவ்வாறான உபகரணங்கள் எடுத்துச் செல்ல முடியும் என்ற போதிலும், பொதுமக்கள் பாதுகாப்பின் அடிப்படையில விமானங்களில் கைப்பொதிகளாக எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விமானங்களில் மடிக் கணனிகள் மற்றும் கைக்கணனிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் iசெல்லிடப்பேசிகளை விடவும் பெரிய இலத்திரனியல் சாதனங்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உள்துறை திணைக்களம் இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Laptops, e-readers, cameras, tablets, printers, electronic games மற்றும் portable DVD players போன்றன இந்த தடையில் உள்ளடக்க்பபட்டுள்ளன.

எவ்வாறெனினும் பரிசோதனையிடப்பட்ட கையில் கொண்டு செல்லும் பொதிகள் அல்லாத பொதிகளில் இந்தப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சில நுகர்வுப் பொருட்களை பயன்படுத்தி வெடிப்புக்களை மேற்கொள்ளக் கூடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *