உலகம்

ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்


ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி  (Alexei Navalny ) விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் பாரியளவில் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி க்கு 15 நாட்கள் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட போராட்டமொன்றை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு 350 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *