இலங்கை பிரதான செய்திகள்

இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களை பாடத் திட்டத்தில் உள்வாங்க கல்வி அமைச்சர் இணக்கம் – டக்ளஸ்

4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களடங்கிய பாடத் திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னால்  கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர்; டக்ளஸ் தேவானந்தாவினால் அனுப்பப்பட்டுள்ள ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1993ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எமது நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 36,026 பேர் உயிரிழந்துள்ளனர். 63,18,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2006 – 2015 காலப்பகுதிக்குள் 803 பேர் உயிரிழந்தும், 97,25,904 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

அதே நேரம் எமது நாட்டில் நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையானது வருடத்தில் 1500க்கும் அதிகமாகும் என்று தெரிய வருகிறது. வீதி விபத்துகள் காரணமாக வருடத்திற்கு சுமார் 3000க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். அதற்கு சமமானளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பாடசாலை மட்டத்திலிருந்து விழிப்புணர்வு பாடத் திட்டங்கள் தேவை என டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு செவிமடுத்துள்ள கல்வி அமைச்சு, 3ஆம் தரத்திலிருந்தும் இது தொடர்பில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டங்களை உள்வாங்குவதற்கும், 2019ஆம் ஆண்டு முதல் 4ஆம் தரத்திலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *