விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வி


உலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா, பொலிவியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பொலிவியா வெற்றியீட்டியுள்ளது. ஆர்ஜன்டீனா அணித் தலைவர் லயனல் மெஸ்ஸிக்கு போட்டித் தடை விதித்து சில மணித்தியாலங்களில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி நடுவர் ஒருவருடன் முரண்பட்டுக் கொண்டதனால் மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனா இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக நேரடியாக உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதி சுற்றுப் போட்டித் தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. பொலிவிய அணியின் சார்பில் Juan Carlos Arce மற்றும் Marcelo Martins ஆகியோர் கோல்களைப் போட்டிருந்தனர். மெஸ்ஸிக்கு எதிரான போட்டித் தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *