இலங்கை பிரதான செய்திகள்

நெடுந்தீவு சிறுமியின் வழக்கு நாளை முதல் யாழ்.மேல் நீதிமன்றில் தொடர் விசாரணை – மரபணு பரிசோதனை குற்றவாளி கண்டறியப்படவுள்ளார்.


யாழ்ப்பாணம் நெடுந்தீவு சிறுமி ஜேசுதாஸ் லக்சினியை படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணையானது நாளை திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சிப் பதிவிற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி கடையொன்றுக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு விசாரணையானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது.

நீதவான் நீதிமன்ற வழக்கு விசாரணையானது முடிவுறுத்தப்பட்டு வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தபப்ட்டது. அதனை தொடர்ந்து வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரத்தை யாழ். மேல் நீதிமன்றுக்கு கடந்த 2017.03.10ம் திகதி சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த வழக்கின் சாட்சிப் பதிவுகளுக்காக நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான விசாரணைக்காக நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. இவ் வழக்கில் அரச தரப்பு சாட்சிகளாக பன்னிரண்டு சாட்சியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மரபணு பரிசோதனை குற்றவாளி கண்டறியப்படவுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் மரபணு பரிசோதனை மூலமான குற்றவாளியை கண்டறியவுள்ள முதலாவது வழக்கின் சாட்சி பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி கடையொன்றுக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை திங்கட்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது. அதன் போதே மரபணு பரிசோதனை மூலமான குற்றவாளி கண்டறியப்படவுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணையின் போது, முக்கிய சாட்சிகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் காணப்பட்ட விந்தணுக்கள் தொடர்பாக ஆய்வு செய்த ஜின்டெக் நிறுவனத்தின் விஞ்ஞானி எஸ்.டி.எஸ்.குணவர்த்தன மரபணு அறிக்கையை சமர்ப்பித்து சாட் சியமளிக்கவுள்ளார்.
அதேபோன்று குறித்த சிறுமியின் உடலில் காணப்பட்ட பல்லினால் கடிக்கப்பட்ட காயங்கள் தொடர்பாக ஆய்வு செய்த பல் வைத்திய நிபுணர் டாக்டர் ஜயனி. பீ. வீரட்ண தமது பல் வைத்திய அறிக்கையினை சமர்ப்பித்து சாட்சியமளிக்கவுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கானது சிறுமி சேயா வழக்கிற்கு பின்னர் மரபணு பரிசோதனை மூலம் குற்றவாளியை கண்டறியவுள்ள வழக்கு என்பதுடன் யாழ்.மேல் நீதிமன்றில் மரபணு பரிசோதனை மூலமான குற்றவாளியை கண்டறியவுள்ள முதலாவது வழக்காகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *