இலங்கை

கிழக்கு மாகாண சுற்றுலா சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் நியமனம்…..

கிழக்கு மாகாண சுற்றுலா  சபையின் பணிப்பாளராக சர்ஜூன் அபூபக்கர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால்  இன்று  முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சுற்றுலா மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் சுற்றுலா சபைக்கான பணிப்பாளருக்கான நியமனக் கடிதத்தை கொழும்பிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்தார்.
 
நியமனம் வழங்கும் சந்தரப்பத்தில்  சுற்றுலா சபையின் தலைவர் சந்திரா மொஹட்டி மற்றும் அவுஸ்திரேலியா முதலீட்டாளர் ஒருவரும் பங்கேற்றிருந்தார்.
 
இதற்கு முன்னர் வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளராகவும்,முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஆலோசகராகவும்,மகளிர் மற்றும் சிறுவர் திறன் அபிவிருத்தி அமைச்சின் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளராகவும் மற்றும் சுகாதார பிரதியமைச்சரின் ஊடக செயலாளராகவும், சர்ஜூன் அபூபக்கர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *