இலங்கை

சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா கதிர்காமத்தம்பியின் இறுதி சடங்கு இன்றைய தினம் யாழில் நடைபெறவுள்ளது.

சிரேஸ்ட ஊடகவியலாளரான,   செல்லையா கதிர்காமத்தம்பி (வயது 89) கொக்குவில் தாவடியில் உள்ள அவரது இல்லத்தில்   கடந்த புதன்கிழமை (05) காலை அமரத்துவமடைந்தார்.  ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர் அங்கு அதிபராகவும் பணியாற்றிய அவர் சமநேரத்தில் பிராந்திய ஊடகவியலாளராகவும் பணியாற்றினார்.ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகாலம் இவர் ஊடகவியலாளராகப் பணியாற்றினார்.

டெயிலி மிரர், டெயிலி நியூஸ் , தினகரன் மற்றும் சில பத்திரிகைகளுக்கு யாழ்.பிராந்தியச் செய்தியாளராக இவர் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சு ஊடகத்திலும் சிறிது காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அவர், இறக்கும்வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்குநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts