இந்தியா

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர் பான தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரி மீண்டும் மனு


குளிர் பான தொழிற்சாலைகள்  உட்பட 25 நிறுவனங் களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மீ்ண்டும் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், திருநெல்வேலியில் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் உட்பட 25 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன எனவும்  இந்த நிறுவனங்களுக்கு தாமிர பரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருவதனால் தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதனால்   தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு  நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு எதிராக உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஏற் கெனவே 2 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்;டு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்  இந்தத் தடையை விலக்கக் கோரி குளிர்பான நிறுவனங்கள் சார்பில்  மீளாய்வுமனு தாக்கல் செய்யப்படட்தனைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *