இந்தியா பிரதான செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு – தொழிற்சாலைகளிலும்

தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் ஆதரவு தமிழக அமைச்சரான  விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் மையத்திற்கு 3 கார்களில் சென்ற  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதுடன் அங்கிருந்த பல்வேறு கோப்புகளையும் ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் இலுப்பூர் அருகே உள்ள அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அதிமுக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதுடன்  சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின்  விடுதியிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *