இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது


டெல்லியில் போராடிவரும்  தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில்  ; தலைமையில் திடீர் போராட்டத்தில்  மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர் வீதியை மறித்து சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும்   முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டக்காரர்களிடம்  கோரிக்கை விடுத்ததுடன் அவர்களை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *