இலங்கை

அபிவிருத்தி நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்


அபிவிருத்தி நாடொன்றை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள தமிழ் புத்தாண்டின் மரபுகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்வது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ள அவர் விவசாய அடிப்படையைக் கொண்ட அனைத்து தரப்பினரும் நன்றி பாராட்டும் நோக்கில் மேற்கொள்ளும் ஓர் நிகழ்வாக இந்த புத்தாண்டை கருத முடியும் என தெரிவித்துள்ளார்.

சூரியனுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மகிழ்ச்சி, சமாதானம், நல்லிணக்கம், ஒற்றுமை என்பன நெஞ்சில் அகலா வகையில் எப்போதும் இனித்திடும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டுமென தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *