இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – கொலன்;னாவை குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வுகொழும்பு கொலன்னாவ மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின ;போது, 16 சடலங்கள்வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 குழந்தைகளின் உடல்களும் உள்ளடங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்  மீட்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுமக்களை குறித்த பிரதேசத்திற்குப் பார்வையிடுவதற்காக வருவதனை தவிர்க்குமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன்  குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர்வரை பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவை குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Apr 15, 2017 @ 03:02

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தின் மீட்டொத்தமுல்லையில் நேற்றையதினம் குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விபத்தில்  100 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குப்பை மேட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கும் அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்காகவும் அனர்த்தத்திற்குள்ளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி முப்படையினர், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *