இலங்கை பிரதான செய்திகள்

26 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்:-

தேர்தல் காலங்களில் எங்களிடம் வருவதாக இருந்தால் இப்பொழுதே எங்கள் விடயத்தில் அக்கறை செலுத்துங்கள்  26ஆவது நாள்  கவனயீர்ப்பில் ஈடுப்படும் பன்னங்கண்டி மக்கள்

கிளிநொச்சியில் தாம் குடியிருக்கும் காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது 26ஆவது நாளாகவும் தொடர்கிறது. குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம், இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக்கோரியுள்ளனர்.

அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டமும், கோரிக்கையும் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது.   அவர்கள்  இதுவரை எங்களின் பிரச்சினை தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என நாங்கள் அறிக்கின்றோம். இது எங்களை மேலும் மனவருத்திற்கு உள்ளாக்கியுள்ளது.  மாவட்டத்தி;ல் அதனை செய்தோம் இதனைசெய்தோம் செய்து வருகின்றோம் என கூறுகின்ற அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்  தரப்புகள் எங்களது விடயத்தில் எதுவும்செய்யாது விட்டால் தேர்தல் காலங்களில் எங்கள் பக்கம் திரும்பியும் பார்க்க கூடாது அந்த நேரத்தில் யாராவது வந்து எதனையாவது கூறினால் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் எனவே தேர்தல் காலங்களில் எங்கள் மத்தியில் வரும் நோக்கம் இருந்தால் இப்போதே எங்களது விடயத்தில் அக்கறை எடுத்து செயற்பட வேண்டும் என்றும்  பன்னங்கண்டி மக்கள் தெரிவித்தள்ளனர்.


Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *