இந்தியா

சென்னை வெப்பம் குறித்த வட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம் – பிரதீப் ஜான்


சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது அதிகாரபூர்வ முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று 45 டிகிரி செல்சியஸ் முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என வாட்ஸ்அப்பில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்த அவர் சென்னையில் இன்றைய தினம் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டுவதே கடினம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அனல் காற்று எச்சரிக்கையை 45 டிகிரி செல்சியஸ் வெயில் என தவறாக திரித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பாதீர் எனவும்  அத்தகைய வட்ஸ் அப் தகவல்களைப் பகிரவும் செய்யாதீர் எஎன அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *