இலங்கை பிரதான செய்திகள்

சர்ச்சைக்குரிய தனது கட்டுரையை மீளப்பெறுவதாக தமிழ்க்கவி அறிவிப்பு

கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் 2016 இல் தான் எழுதிய கிளிநொச்சியும் மலையகத் தழிழர்களும்  எனும் சர்ச்சைக்குரிய கட்டுரையை தான் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்டுரை தொடர்பாக மனம் வருந்துவதாகவும் தமிழ்க் கவி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று 18-04-2017 திகதியிட்டு கரைச்சி கலாசார பேரவைக்கு எழுதிய கடித்தத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
07-04-2017 கரைச்சி கலாசார விழாவில் வெளியிடப்பட்ட கரை எழில் நூலில்  மலையகத் தழிழரும் கிளிநொச்சியும் எனும் கட்டுரையில் சில விடயங்கள் மலையக சமூகத்தை இழிவுப்படுத்துவதாக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும்  மக்கள் மத்தியில் ஒரு வித கொதி நிலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டதையிட்டு மேற்படி கட்டுரையில் ஒரு சில விடயங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டதையிட்டு மக்களின் மனநிலைகளை கருத்தில் கொண்டு அவர்களது மனநிலைகள் பாதிப்புறா வண்ணம் அவர்களுக்கும் எனக்குமான நல்ல நட்புறவு தொடர்வதற்காகவும் நான் கட்டுரை தொடர்பாக எனது மனவருத்ததினை தெரிவித்துக்கொள்வதுடன்,குறித்த கட்டுரையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *