விளையாட்டு

பனமா கால்பந்தாட்ட வீரர் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது


பனமா கால்பந்தாட்ட வீரர் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல சர்வதேச கால்பந்தாட்ட வீரர் அமில்கார் ஹென்றிகுஷ் ( Amílcar Henríquez  ) துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். 33 வயதான அமில்கார் வீட்டிலிருந்து வெளியேறிய போது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டிருந்தார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரில் கைதான நான்கு பேரும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணத்திற்காக அவர் இவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தக் கொலை ஓர் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *