இலங்கை பிரதான செய்திகள்

பயன்படுத்த முடியாத நிலையில் 82 ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளன. நேற்று புதன் கிழமை  முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த  டாஸ் நிறுவனத்தினரால்  இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகளில்  அனைத்தும் முழுமையாக காணப்படவில்லை .  இவை அனைத்தும் பளை காவல்துறையினரிடம் புதன் கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *