உலகம்

சிரிய விஷவாயு தொடர்பான ஆதாரத்தை வெளியிடப் போவதாக பிரான்ஸ் அறிவிப்பு


சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்துள்ளதுடன்  400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ள பிரான்ஸ் அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆதாரத்தை சமர்பிக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-மார்க் ஐரால்ட் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *